இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி

குறள் 1191 — தனிப்படர் மிகுதி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

மூலம் · அச்சுப் பக்கம் 243 · ஸ்கேன் 276 · மூலமும் சான்றும்