இன்பத்துப்பால் · கற்பியல் · உறுப்புநலன் அழிதல்

குறள் 1240 — உறுப்புநலன் அழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.

மூலம் · அச்சுப் பக்கம் 252 · ஸ்கேன் 285 · மூலமும் சான்றும்