இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு புலத்தல்

குறள் 1297 — நெஞ்சொடு புலத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 264 · ஸ்கேன் 297 · மூலமும் சான்றும்