இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1304 — புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 265 · ஸ்கேன் 298 · மூலமும் சான்றும்