இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1310 — புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

மூலம் · அச்சுப் பக்கம் 266 · ஸ்கேன் 299 · மூலமும் சான்றும்