அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை

குறள் 140 — ஒழுக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 28 · ஸ்கேன் 61 · மூலமும் சான்றும்