அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமை

குறள் 152 — பொறையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 31 · ஸ்கேன் 64 · மூலமும் சான்றும்