அறத்துப்பால் · துறவறவியல் · தவம்

குறள் 270 — தவம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.

மூலம் · அச்சுப் பக்கம் 54 · ஸ்கேன் 87 · மூலமும் சான்றும்