பொருட்பால் · அரசியல் · இடனறிதல்

குறள் 492 — இடனறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வரும் பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும் பயன் கிட்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 101 · ஸ்கேன் 134 · மூலமும் சான்றும்