பொருட்பால் · அரசியல் · தெரிந்து வினையாடல்

குறள் 517 — தெரிந்து வினையாடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்ததனை அவன்கண் விடல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 106 · ஸ்கேன் 139 · மூலமும் சான்றும்