அறத்துப்பால் · இல்லறவியல் · மக்கட்பேறு

குறள் 66 — மக்கட்பேறு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 14 · ஸ்கேன் 47 · மூலமும் சான்றும்