அறத்துப்பால் · இல்லறவியல் · அடக்கம் உடைமை

குறள் 124 — அடக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நிலையிற் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 25 · ஸ்கேன் 58 · மூலமும் சான்றும்