பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை

குறள் 722 — அவையஞ்சாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 147 · ஸ்கேன் 180 · மூலமும் சான்றும்