பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை

குறள் 723 — அவையஞ்சாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத் தஞ்சா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 147 · ஸ்கேன் 180 · மூலமும் சான்றும்